
பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை சுப்பிரமணியர் கோயில் ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை சுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
ஜல்லிக்கட்டுப்போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு)தெய்வானை தொடங்கி வைத்தார். தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.
தொடர்ந்து திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 800 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க 250 மாடு பிடி வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். காளைகளை சிறந்த முறையில் அடக்கிய வீரர்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது