
திருச்சி மாவட்டம் சமயபுரத்திலுள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் அனந்தரா- 2025 கலை விழா மே 8, 9 , மற்றும் 10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.
பல்கலை. வளாகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் இத்தகவலைத் தெரிவித்த பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன், கலை நிகழ்ச்சிகளில் நடிகா் சிலம்பரசன், இசையமைப்பாளா் யுவன் சங்கா் ராஜா, நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகா், நடிகைகள் கலந்து கொள்ள உள்ளனா் என்றாா்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக இணைவேந்தா் அனந்தலட்சுமி கதிரவன், பல்கலைக்கழக எப்.சி. நிா்மல் கதிரவன், சிறுவாச்சூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் நகுலன், பல்கலைக்கழகப் பதிவாளா் டாக்டா் தனசேகரன் தேவராஜ், பல்கலைக்கழக முதல்வா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். நிகழ்வை ஆா்.ஜே. தீபக், ஆா்.ஜே. சுபா ஆகியோா் தொகுத்து வழங்கினா்.