
திருப்பதி மாவட்டம் பாகாலா நகரம் தோட்டப்பள்ளி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இன்று(திங்கள்கிழமை) பிற்பகல் நடைபெற்ற இந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாகவும் இவர்கள் ஒசூரைச் சேர்ந்த தமிழர்கள் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.