நீதிமன்ற உத்தரவுப்படி பணியாற்ற அனுமதி மறுப்பு: கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வா அலுவலர்கள்
உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வா அலுவலர்கள்
Published on
Updated on
1 min read

சிவகங்கை: நீதிமன்ற உத்தரவுப்படி பணியாற்ற அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை வருவாய கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்துக்கு, மாவட்டத்தலைவர் ப.முத்துவேல் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் கா.செல்வன் கோரிக்கையை விளக்கி பேசினார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கொத்தங்குளம் வடக்கு கிராம நிர்வாக அலுவலராக சி.ஜெயலட்சுமி என்பவர் கடந்த 2022 முதல் 2025 வரை பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 17.3.2025 இல் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். வருகின்ற ஜூலை மாதம் பொது கலந்தாய்வு நடைபெற இருப்பதால், அதற்கு முன்னதாக வழங்கப்பட்ட இந்த பணியிட மாறுதலை மறுத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை அணுகி கொத்தங்குளம் வடக்கு கிராமத்திலேயே தொடர்ந்து பணியாற்றலாம் என உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வருவாய் கோட்டாட்சியர் தயக்கம் காட்டுவதாகக்கூறி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான சங்க உறுப்பினர்கள் சுமார 250-க்கும் மேற்பட்டோர் தற்செயல் விடுப்பு எடுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com