

செங்கல்பட்டு: டித்வா புயல் காரணமாக அதிபலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.
மழை பாதிப்புகளை சமாளிக்க மாவட்ட நிா்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.