

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மாதத்தின் மற்றும் வாரத்தின் முதல்நாளான நேற்று (திங்கள் கிழமை) கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,070-க்கும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து உயர்ந்து கொண்ட வந்த தங்கத்தின் விலை, இன்று (டிச.2) காலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ஒரு கிராம் ரூ. 12,040-க்கும், ஒரு சவரன் ரூ. 96,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.196-க்கும், ஒரு கிலோ ரூ.1,96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.