திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு
மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழ அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என மனுதாரர் ராம ரவிக்குமார் மற்றும் வழக்குரைஞர் நிரஞ்சன் ஆகியோர் குற்றம்சாட்டினர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இதனிடையே, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் ஏற்ற உத்தரவிடக் கோரி மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம. ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், வழக்கமான இடங்களுடன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணிலும் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
இதற்கு எதிராக கோயில் நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வரவில்லை. இதன் காரணமாக, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் புதன்கிழமை மாலை மகா தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதன்படி, அந்தத் தூணில் மகா தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகள் புதன்கிழமை பிற்பகலில் நடைபெற்றன. தீபம் ஏற்றுவதற்குத் தேவையான மண் பானை, நெய், திரி, சூடம் போன்றவை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதனிடையே, மாலை 4 மணி அளவில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட தீபம் ஏற்றும் பொருள்கள் அனைத்தும் கீழே இறக்கப்பட்டன. மாலை 6.5 மணி அளவில் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து, இந்து அமைப்பினர் மலைப் பாதை அருகே திரண்டு, போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு, மலை மீது ஏற முயன்றனர். அப்போது, அவர்களுக்கும், போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், இரு காவலர்கள், பாஜக மாவட்டத் தலைவர் சிவலிங்கம், நிர்வாகி ராக்கப்பன் ஆகியோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, தென் மண்டல காவல் துறைத் தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா, மாநகரக் காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் ஆகியோர் திருப்பரங்குன்றத்துக்கு நேரில் வந்து, பாதுகாப்பை பலப்படுத்தினர்.
இதனிடையே, பொதுமக்களின் பாதுகாப்பு, பொது அமைதியை கருத்தில் கொண்டு, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு, கூட்டத்தைக் கலைக்கும் பணியை போலீஸார் மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்து அமைப்பினரை போலீஸார் வலுக்கட்டாயமாக அகற்றி காவல் துறை வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இதன் காரணமாக மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அடங்கிய அமரும் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அரசு சட்ட-ஒழுங்கு பிரச்னைகளை எதிர்கொண்டது
அங்கு நடைபெற்ற விதி மீறல்கள், மதப் பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. காவல்துறையின் தடுப்புகள் உடைப்பு, காவல்துறை மீதான தாக்குதலால் இரண்டு காவலர்கள் காயம், தனி நீதிபதி உத்தரவால் மத நல்லிணக்கம் மற்றும் எந்த மாதிரியான சட்ட-ஒழுங்கு பிரச்னைகளை அரசு எதிர்கொண்டது, நீதிமன்ற பாதுகாப்புக்காக உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை மனுதாரரின் பாதுகாப்புக்காக அனுப்பியது தவறு உள்ளிட்டவற்றை நீதிபதிகள் முன்பாக தமிழக அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேபோன்று தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்தாமல் அரசு அதனை தடுத்து நிறுத்தி இருப்பதாகவும், 144 தடை உத்தரவை சுட்டிக்காட்டி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றம் விடவில்லை, காவல்துறை பாதுகாப்பு வழங்காததால் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டது என்ற வாதங்களை மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நிரஞ்சன்முன் வைத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இது குறித்து உத்தரவு அளிக்கப்படும் என தெரிவித்தனர்.
அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது
நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளரை சந்தித்த மனுதாரர் ராம ரவிக்குமார் மற்றும் வழக்குரைறிஞர் நிரஞ்சன் கூறுகையில்,
"தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை அரசு பின்பற்றவில்லை மாறாக அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளது. அரசாங்கம் பொதுவானதாக செயல்பட வேண்டும். ஆனால், தேர்தலுக்காகவா, ஓட்டுக்காக இப்படி செயல்படுகிறதா என்று தெரியவில்லை. நேற்று நிகழ்வின் போது ஒரு இஸ்லாமியர் கூட ஆதரவாகவோ எதிராகவோ செயல்படவில்லை. சில விஷயங்களை இந்த சமுதாயத்தில் ஈடுபட அமைதியை குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு உள்ளனர்.
காலையில் மலை உச்சியில் உள்ள தூண் மீது தீபம் ஏற்றுவதற்கான பணிகளை செய்தார்கள், மாலையில் அதனை நிறுத்தி விட்டார்கள். இந்த அரசு இந்து மதத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. எங்களது தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விரைவில் இதன் மீது உத்தரவு வழங்கப்படும் என கூறியிருக்கிறார்கள். நல்ல தீர்ப்பு வரும் என நாங்கள் காத்திருக்கிறோம் என கூறினார்.செயல்படுகிறது: வழக்குரைஞர் குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழ அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என மனுதாரர் ராம ரவிக்குமார் மற்றும் வழக்குரைஞர் நிரஞ்சன் ஆகியோர் குற்றம்சாட்டினர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இதனிடையே, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் ஏற்ற உத்தரவிடக் கோரி மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம. ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், வழக்கமான இடங்களுடன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணிலும் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
இதற்கு எதிராக கோயில் நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வரவில்லை. இதன் காரணமாக, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் புதன்கிழமை மாலை மகா தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதன்படி, அந்தத் தூணில் மகா தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகள் புதன்கிழமை பிற்பகலில் நடைபெற்றன. தீபம் ஏற்றுவதற்குத் தேவையான மண் பானை, நெய், திரி, சூடம் போன்றவை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதனிடையே, மாலை 4 மணி அளவில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட தீபம் ஏற்றும் பொருள்கள் அனைத்தும் கீழே இறக்கப்பட்டன. மாலை 6.5 மணி அளவில் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து, இந்து அமைப்பினர் மலைப் பாதை அருகே திரண்டு, போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு, மலை மீது ஏற முயன்றனர். அப்போது, அவர்களுக்கும், போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், இரு காவலர்கள், பாஜக மாவட்டத் தலைவர் சிவலிங்கம், நிர்வாகி ராக்கப்பன் ஆகியோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, தென் மண்டல காவல் துறைத் தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா, மாநகரக் காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் ஆகியோர் திருப்பரங்குன்றத்துக்கு நேரில் வந்து, பாதுகாப்பை பலப்படுத்தினர்.
இதனிடையே, பொதுமக்களின் பாதுகாப்பு, பொது அமைதியை கருத்தில் கொண்டு, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு, கூட்டத்தைக் கலைக்கும் பணியை போலீஸார் மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்து அமைப்பினரை போலீஸார் வலுக்கட்டாயமாக அகற்றி காவல் துறை வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இதன் காரணமாக மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அடங்கிய அமரும் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அங்கு நடைபெற்ற விதி மீறல்கள், மதப் பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. காவல்துறையின் தடுப்புகள் உடைப்பு, காவல்துறை மீதான தாக்குதலால் இரண்டு காவலர்கள் காயம், தனி நீதிபதி உத்தரவால் மத நல்லிணக்கம் மற்றும் எந்த மாதிரியான சட்ட-ஒழுங்கு பிரச்னைகளை அரசு எதிர்கொண்டது, நீதிமன்ற பாதுகாப்புக்காக உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை மனுதாரரின் பாதுகாப்புக்காக அனுப்பியது தவறு உள்ளிட்டவற்றை நீதிபதிகள் முன்பாக தமிழக அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேபோன்று தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்தாமல் அரசு அதனை தடுத்து நிறுத்தி இருப்பதாகவும், 144 தடை உத்தரவை சுட்டிக்காட்டி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றம் விடவில்லை, காவல்துறை பாதுகாப்பு வழங்காததால் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டது என்ற வாதங்களை மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நிரஞ்சன்முன் வைத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இது குறித்து உத்தரவு அளிக்கப்படும் என தெரிவித்தனர்.
நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மனுதாரர் ராம ரவிக்குமார் மற்றும் வழக்குரைஞர் நிரஞ்சன் கூறியதாவது:
"தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை அரசு பின்பற்றவில்லை மாறாக அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளது. அரசாங்கம் பொதுவானதாக செயல்பட வேண்டும். ஆனால், தேர்தலுக்காகவா, ஓட்டுக்காக இப்படி செயல்படுகிறதா என்று தெரியவில்லை. நேற்று நிகழ்வின் போது ஒரு இஸ்லாமியர் கூட ஆதரவாகவோ எதிராகவோ செயல்படவில்லை. சில விஷயங்களை இந்த சமுதாயத்தில் ஈடுபட அமைதியை குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு உள்ளனர்.
நல்ல தீர்ப்பு வரும் என காத்திருக்கிறோம்
காலையில் மலை உச்சியில் உள்ள தூண் மீது தீபம் ஏற்றுவதற்கான பணிகளை செய்தார்கள், மாலையில் அதனை நிறுத்தி விட்டார்கள். இந்த அரசு இந்து மதத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. எங்களது தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விரைவில் இதன் மீது உத்தரவு வழங்கப்படும் என கூறியிருக்கிறார்கள். நல்ல தீர்ப்பு வரும் என நாங்கள் காத்திருக்கிறோம் என கூறினார்.
Thiruparankundram Deepam issue: Government is acting against Hindus - lawyer alleges
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.