

விழுப்புரம்: சட்ட மேதை பி.ஆர். அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, விழுப்புரத்திலுள்ள அவரது சிலைக்கு திமுக இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை பி.ஆர். அம்பேத்கரின் 70 ஆவது நினைவு நாள் இன்று(டிச.6) அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்வில் திமுக துணைப் பொதுச் செயலர் க.பொன்முடி, எம்.எல். ஏ., எம்எல்ஏக்கள் இரா. லட்சுமணன், அன்னியூர் அ.சிவா, விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் பொன். கெளதமசிகாமணி, முன்னாள் எம்எல்ஏ செ. புஷ்பராஜ், நகர்மன்ற முன்னாள் தலைவர் இரா. ஜனகராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் ம.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து அரசு சடடக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கா உருவப் படத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினமலர் துாவி மரியாதை செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.