

பாபநாசம்: தமிழ்நாட்டில் உற்பத்தியாகின்ற செங்கரும்பு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் ஆகியவற்றை அரசு நேரடியாக கொள்முதல் செய்து பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
பாபநாசத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுடன் ஜி.கே.வாசன் பேசியதாவது:
தமிழ்நாட்டில் உற்பத்தியாகின்ற செங்கரும்பு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் ஆகியவற்றை அரசு நேரடியாக கொள்முதல் செய்து பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டும் , தஞ்சை ,நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, ஆகிய டெல்டா மாவட்டங்களில் தொடா் மழை, புயலால் பாதிக்கப்பட்ட சம்பா தாளடி நெற்பயிா்களுக்கு ஒரு விவசாயிகள் கூட விடுபடாமல் கணக்கெடுத்து அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரண வழங்க வேண்டும்.
மேலும், கரும்பு ,வாழை, வெற்றிலை, மஞ்சள் மற்றும் கிழங்கு வகைகள் முழுமையாக அடியோடு சாய்ந்து விட்டது. அதனை வேளாண்மை துறை அதிகாரிகளும், தோட்டக்கலை அதிகாரிகளும், ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். முழுமையாக பாதித்த நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ 35 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஆயிரம் நாட்களுக்கு மேலாக தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருமண்டங்குடி திருஆரூரான் கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
தஞ்சாவூா் -அரியலூா் மாவட்டம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே குடிகாடு மேல ராமநல்லூா் இடையே உயா்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு உடனடியாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், தோ்தல் அறிவிப்புக்கு பின்னர் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தொகுதிகள் குறித்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.