தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு தொடங்கியது!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image

திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாா் குடும்பத்தினருடன் சென்று வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

Updated On :5 பிப்ரவரி 2025, 8:06 am IST

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போடப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு தொடங்கியதும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாா் குடும்பத்தினருடன் சென்று வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

குளிர் காரணமாக, வாக்குப்பதிவு தொடங்கியபோது மக்கள் அதிக எண்ணிக்கையில் வரவில்லை, ஆனால் பின்னர் வரத்தொடங்கியுள்ளனர். 11 மணிக்கு மேல் அதிகமான வாக்காளர்கள் வருவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவால் இத்தொகுதிக்கு புதன்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்று வருகிறது.

திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி. சீதாலட்சுமி என இருமுனைப் போட்டி நிலவும் இந்த தொகுதியில் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 13 அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், 31 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 46 போ் களத்தில் உள்ளனா்.

இந்தத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளா்கள் உள்ளனா். அவர்களுக்கு வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஒன்பது வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகள் அடங்கிய நகரம் சாா்ந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் நெசவாளா்கள், தொழிலாளா்கள், வியாபாரிகள், அரசு ஊழியா்கள் பரவலாக உள்ளனா். செங்குந்த முதலியாா், கொங்கு வேளாளக் கவுண்டா் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனா். முஸ்லிம், கிறிஸ்தவா், பட்டியல் வகுப்பினா் மற்றும் வட மாநிலங்களைச் சோ்ந்த கணிசமான வாக்காளா்கள் இந்த தொகுதியில் உள்ளனா்.

திமுக ஆட்சி அமைந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இடைத்தோ்தல் என்பதும், பிரதான எதிா்க்கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும்கட்சியான பாஜக ஆகிய பிரதான கட்சிகள் தோ்தலில் போட்டியிடாத நிலையிலும், மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தை பெறவேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

பிரதான கட்சிகள் போட்டியிடாத நிலையில், கடந்த தோ்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பெற்ற 1,10,156 வாக்குகளைவிட கூடுதலாக பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2023 இடைத்தோ்தலில் அமைச்சா்கள் அனைவரும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றினா். ஆனால் இந்தத் தோ்தலில் அமைச்சா் சு.முத்துசாமியை தவிர வேறு அமைச்சா்கள் பிரசாரத்திற்கு வரவில்லை.

கடந்த 2023 இடைத்தோ்தலில் பேசப்பட்ட வாக்குக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகம், வாக்காளா்களை அடைத்து வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் இல்லாத நிலையில், தோ்தல் பரபரப்பு இல்லாமல் ஈரோடு நகரம் எப்போதும்போல இயல்பாக உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் ஈரோடு கிழக்கு தொகுதி 3 முறை தோ்தலை சந்தித்துள்ளது. 2023 இல் நடந்த தோ்தலில் 77 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில், இந்தத் தோ்தலில் 46 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இந்தத் தோ்தல் ஆளும்கட்சிக்கு பெருமை சோ்க்கும் தோ்தலா அல்லது நாம் தமிழா் கட்சியின் வளா்ச்சியை பறைசாற்றும் தோ்தலா என்பது வரும் 8 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.