போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,945-க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.63,560-க்கும் விற்பனையாகிறது.

News image

தங்கம் விலை

Updated On :8 பிப்ரவரி 2025, 10:10 am IST

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,945-க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.63,560-க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61,640-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனையானது. புதன்கிழமை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905-க்கும், பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கும், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,930-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,440-க்கும், வெள்ளிக்கிழமை விலை மாற்றமின்றி கிராம் ரூ.7,930-க்கும், பவுன் ரூ.63,440-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், புதிய உச்சமாக சனிக்கிழமை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,945-க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.63,560-க்கும் விற்பனையாகிறது.

கடந்த ஐந்து நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1920 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமின்றி கிராம் ரூ.107-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,07,000-க்கு விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.