நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சீன நிலச்சரிவில் 28 பேர் மாயம்! 2வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!

சீன நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் பணி 2வது நாளாகத் தொடருவதைப் பற்றி...

News image

சீனாவின் ஜின்பிங் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 28 பேர் மாயம்

Updated On :9 பிப்ரவரி 2025, 4:34 pm IST

சீனாவின் தென்மேற்கு மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமான 28 பேரை தேடும் பணி 2வது நாளாக இன்று (பிப்.9) தொடருகிறது.

ஸிசூவான் மாகாணத்தின் ஜுன்லியன் மாவட்டத்தைச் சேர்ந்த ஜின்பிங் கிராமத்தில் பெய்த கனமழையினால், நேற்று (பிப்.8) திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியிலுள்ள ஓர் தொழிற்சாலை உள்பட 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மீட்புப் பணியில் சீனாவின் ஆயுதம் ஏந்திய காவல் படை, தீயணைப்புப் படை, மருத்துவப் பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். மேலும், நவீன டிரோன்கள் மற்றும் உயிர்களை கண்டறியும் ரேடார் கருவிகளைக் கொண்டு இடிபாடுகளுள் சிக்கியுள்ளோரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நிலச்சரிவினுள் சிக்கி படுகாயமடைந்த 2 பேர் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 360க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், கன மழை மற்றும் அப்பகுதியின் புவியியல் சூழல்களினால் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவானது அப்பகுதியின் கட்டடங்களை தகர்த்து சென்றதினால் சுமார் 1.2 கி.மீ நீளத்திற்கு அதன் இடிபாடுகளினால் நிரம்பியுள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும், அந்நாட்டு துணைப் பிரதமர் லியூ குவோசோங் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்.

முன்னதாக, அப்பகுதியைச் சுற்றியுள்ள இடங்களின் புவியல் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ளுமாறும், ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்கள் வேறுயிடங்களுக்கு மாற்றப்பட்டு மற்றொரு பேரிடர் தடுக்கப்பட வேண்டும் என சீன பிரதமர் லி கியாங் கூறியிருந்தார்.

சீனா அந்நாட்டின் பேரிடர் மீட்பு மற்றும் மறு வாழ்விற்காக சுமார் 80 மில்லியன் யுவான் (11 மில்லியன் அமெரிக்க டாலர்) அளவிலான பணத்தை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.