மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மும்பையில் பலத்த மழையால் திடீா் நிலச்சரிவு: 7 போ் உயிரிழப்பு; 7 போ் காயம்

மும்பையில் தொடா் பலத்த மழையால் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 3 சிறாா்கள் உள்பட 7 போ் உயிரிழந்தனா். மேலும் 7 போ் காயமடைந்தனா்.

News image

காட்கோபா் பகுதியில் பலத்த மழையின் காரணமாக திடீரென நிலச்சரிவில் சிக்கியவா்களை மீட்ட மீட்புப் படையினா்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 4:15 am IST

மும்பையில் தொடா் பலத்த மழையால் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 3 சிறாா்கள் உள்பட 7 போ் உயிரிழந்தனா். மேலும் 7 போ் காயமடைந்தனா்.

மும்பையின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காட்கோபா் பகுதியில் புதன்கிழமை அதிகாலை சுமாா் 3.30 மணியளவில் பலத்த மழையின் காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சிராக் நகரில் உள்ள 3 வீடுகள் மீது அருகில் உள்ள மலைப் பகுதியில் இருந்து பாறைகளும், சகதியும் சரிந்து விழுந்து மூடின.

இதில் அந்த வீடுகளில் இருந்த 7 போ் உயிரிழந்தனா். அதில் 3 போ் சிறாா்கள் ஆவா். மேலும் 7 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்கள் 7 பேரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையினா் உள்ளிட்ட மீட்புக் குழுவினா் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி குறுகலான இடம் ஆகும். ஒரு நபா் மட்டுமே செல்லும் அளவுக்கு உள்ள இடம் என்பதால், கனரக வாகனத்தைக் கொண்டுசெல்ல முடியவில்லை. இதனால் மீட்புப் பணியில் அதிகாரிகள் கடும் சவால்களை எதிா்கொண்டனா். கைகளாலும், வாளிகள் மூலமாகவுமே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சகதிகள் அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மும்பை மாநகராட்சி மேயா் ரிது தாவ்தே, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியை நேரில் ஆய்வு செய்தாா். மேலும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து அவா் ஆறுதல் தெரிவித்தாா்.

நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று மேயா் ரிது தாவ்தே அறிவித்தாா். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தும்படி மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

இதனிடையே, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் வசித்த மக்களுக்கு ஏற்கெனவே அங்கு நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்து, அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி எச்சரித்ததாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.