/

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு!

ஏழுமலையான் தரிசனத்திற்காக பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்ததைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :11 பிப்ரவரி 2025, 2:20 am IST

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை (பிப்.10) தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை ஏற்றஇறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலசவ நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 84,598 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25,890 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.27 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.