ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்!

திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக...

News image

கோப்புப்படம் - Center-Center-Chennai

Updated On :13 பிப்ரவரி 2025, 5:17 pm IST

புதிதாக மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்து திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

திமுகவின் நிர்வாக வசதிக்காகவும் கட்சிப் பணிகள் நடைபெறவும் ஈரோடு, திருப்பூர் விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு சில மாவட்டங்களுக்கு புதிதாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

திமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ரமேஷ் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுகவின் நெல்லை மத்திய மாவட்ட புதிய பொறுப்பாளராக அப்துல் வகாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட புதிய பொறுப்பாளராக கே,எம். ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

PDF
திமுக பொறுப்பாளர்கள் நியமனம்
பார்க்க

திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக க. செல்வராஜும் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இல. பத்மநாபனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராக தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.