காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித்திருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

திருச்செந்தூர் அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து கொடிமரத்திற்கு நடந்த சிறப்பு தீபாராதனை.

Updated On :20 பிப்ரவரி 2025, 3:47 pm IST

திருச்செந்தூர்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித்திருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து திருக்கோயிலிலிருந்து கொடிப்பட்டம் புறப்பாடாகி, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. பின்னா் காப்பு கட்டிய ச.பாலசுப்பிரமணியன் வல்லவராயர், கொடிமரத்தில் திருவிழாக் கொடியை ஏற்றினாா். அதன் பின்னா் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருக்கோயில் உதவி ஆணையர் நாகவேல், மணியம் செந்தில்குமார், ஆறுமுகராஜ், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில்  பங்கேற்ற பக்தர்கள்.

விழாவில் பங்கேற்ற பக்தர்கள்.

பத்து நாள்கள் நடைபெறும் மாசித் திருவிழாவில் காலை, மாலை அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிறைவு நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.