தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் படுகாயம்! 2 பேர் கைது!

தில்லியில் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜனவரி 2025, 6:57 am

DIN

தெற்கு தில்லியில் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவரை சுட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு தில்லியின் சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த நசீர் கான் (வயது 22) என்பவரது குடும்பத்துக்கும் அப்பகுதியை சேர்ந்த ராகுல் (24) மற்றும் சுஹைல் (22) ஆகிய இருவருக்கும் நீண்டக்கால பகையிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (ஜன.5) இரவு 8.30 மணியளவில் நசீரின் வீட்டின் அருகே வந்த இருவரும் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவரது கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் படுகாயமடைந்தார்.

பின்னர், உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டதில் அவரது உயிர் காப்பாற்றப்பட்டு தற்போது அவர் நலமாக உள்ளார்.

முன்னதாக, அவர் மீது இந்த கொலைவெறி தாக்குதலை நடத்திய இருவரையும் அப்பகுதியினர் தாக்கியதில் அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தகவல் அறிந்து அங்கு விரைந்த அம்மாநில காவல் துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அந்த இருவரும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் எனவும் அவர்கள் இருவரின் மீது பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.