மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திமுகவினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

அனுமதியின்றி போராட்டங்களை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 6:05 am

அனுமதியின்றி போராட்டங்களை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை நேரமில்லாத நேரத்தில், அண்ணா பல்கலை. மாணவி வழக்கு தொடா்பான விவாதத்தில் பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி பேசினாா். அப்போது, ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்குக் கூட காவல் துறை அனுமதி தருவதில்லை என்று குற்றஞ்சாட்டினாா்.

இதற்கு பதிலளித்த முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு இடங்களில் அனுமதியோடு போராட்டங்கள் நடைபெறுகின்றன. போராட்டம் நடத்த உரிய முன் அனுமதி பெற வேண்டும். போராட்டம் செய்வதற்கென சில பகுதிகள் உள்ளன. திடீரென்று அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறும்போது வழக்கு போடப்படுகிறது என்றாா் முதல்வா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.