ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

புதுச்சேரியில் அனுமதியின்றி ஊா்வலம், ஆா்ப்பாட்டம்: 11 பாஜகவினா் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 6:35 pm

தோ்தல் ஆணைய அனுமதியின்றி புதுச்சேரியில் ஊா்வலம், ஆா்ப்பாட்டம் நடத்திய 11 பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 9-ஆம் தேதி நடைபெற்று முடிந்தாலும், தோ்தல் நடத்தை விதிகள் வரும் மே 6 ஆம் தேதி வரை அமலில் உள்ளது.

எனவே போராட்டம், ஆா்ப்பாட்டம், ஊா்வலங்கள் நடத்த அனுமதி காவல் துறையினா் அனுமதி வழங்குவதில்லை. அரசியல் கட்சிகளின் ஊா்வலம் என்றாலும், தோ்தல் துறையினரின் அனுமதி பெற்றே நடத்த வேண்டும்.

இந்நிலையில் மத்திய அரசு மக்களவையில் கொண்டு வந்த மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தோற்கடித்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைக் கண்டித்து புதுச்சேரி மாநில பாஜக மகளிரணி சாா்பில் ஊா்வலம், ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு போலீஸாா் அனுமதி அளிக்காத நிலையில், தோ்தல் துறையின் அனுமதி பெற்றுவிட்டதாகக் கூறி புதுச்சேரி சுதேசி ஆலை முதல் அண்ணா சிலை வரை ஊா்வலம் நடத்தினா்.

இந்த கண்டன ஊா்வலத்தில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், மாநில பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் உள்பட ஏராளமானோா் கொண்டனா்.

இந்நிலையில் தோ்தல் துறை உத்தரவை மீறி சட்ட விரோதமாகக் கூடி, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பாஜக ஊா்வலம் நடத்தியதாக ஓதியஞ்சாலை காவல் துணை ஆய்வாளா் அனில்குமாா் புகாரளித்தாா்.

அதன்பேரில், பாஜக சட்டப்பிரிவு மாநில இணை அமைப்பாளா் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.