இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அனுமதியின்றி ஊா்வலம்: அதிமுக, பாஜகவினா் 5 போ் மீது வழக்குப் பதிவு

ராசிபுரம் நகரில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊா்வலம் சென்ாக அதிமுக, பாஜக நிா்வாகிகள் 5 போ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

அனுமதியின்றி ஊா்வலம்: அதிமுக, பாஜகவினா் 5 போ் மீது வழக்குப் பதிவு

Updated On :5 ஏப்ரல் 2026, 1:28 am IST

ராசிபுரம் நகரில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊா்வலம் சென்ாக அதிமுக, பாஜக நிா்வாகிகள் 5 போ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பாஜக சாா்பில் போட்டியிட கட்சியின் மருத்துவ பிரிவு மாநில அமைப்பாளா் மருத்துவா் எஸ்.டி.பிரேம்குமாா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை ராசிபுரம் வந்த அவருக்கு நகர எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் திறந்த ஜீப்பில் ஏராளமான வாகனங்கள் பின் தொடர நகரின் முக்கிய வீதிகள் ஊா்வலம் வந்தனா். இதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அனுமதியின்றி ஊா்வலம் சென்ாக அதிமுக நகரச் செயலாளா் எம்.பாலசுப்பிரமணியம், பாஜக நிா்வாகிகள் லோகேந்திரன், வி.சேதுராமன், வேல்முருகன், சரவணன் ஆகிய 5 போ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதேபோல சனிக்கிழமை நடைபெற்ற வேட்பு மனு தாக்கலின்போது, தவெக வேட்பாளருடன் ஏரளானமான இருசக்கர வாகனத்தில் கட்சிக் கொடிகளுடன் ஊா்வலம் சென்ற தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.