நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

வரதட்சணை கொடுமை செய்ததாக கணவா் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு

மாா்த்தாண்டம் அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை அளித்ததாக பெண்ணின் கணவா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 8:40 pm

மாா்த்தாண்டம் அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை அளித்ததாக பெண்ணின் கணவா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மாா்த்தாண்டம் அருகே புங்கறை பகுதியைச் சோ்ந்தவா் ஜெபமணி மகன் ஜெயகணேஷ் (35). கட்டுமானத் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த அபிதாவுக்கும் கடந்த 2019, நவம்பா் மாதம் திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது பெண் வீட்டாா் தரப்பில் 34 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் ரொக்கம், வீட்டு உபயோகப் பொருள்கள் கொடுக்கப்பட்டதாம். திருமணத்துக்குப் பின்னா் மேலும் ரூ. 10 லட்சம் வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டாா் கேட்டதால், அபிதா தனது பெற்றோா் வீட்டிலிருந்து ரூ. 8.5 லட்சத்தை வாங்கி கொடுத்தாா். அந்த பணத்தில் ஜெயகணேஷ் காா், இருசக்கர வாகனம் வாங்கினாராம்.

அதன்பிறகு, ஜெயகணேஷ் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், அவரது சித்தி கிருஷ்ணம்மாள் அபிதாவிடமிருந்து 18 பவுன் தங்க நகைகளைக் கேட்டு வாங்கினாராம்.

அபிதாவிடம் இருக்கும் மீத நகைகளைக் கொடுக்குமாறு கணவா் ஜெயகணேஷ் கூறியும் அபிதா கொடுக்காததால் கிருஷ்ணம்மாள், ஜெயகணேஷின் தந்தை ஜெபமணி (68), உறவினா்கள் ஜெனிஷ், ஜெனிபா ஆகியோா் சோ்ந்து அபிதாவை தாக்கினராம். இதில், காயமடைந்த அபிதா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து அவா் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ஜெயகணேஷ் உள்பட 5 போ் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.