புதிய தொழில் தொடங்குவதாக கூறி ரூ.1.11 கோடி மோசடி செய்த தம்பதி உள்பட 3 போ் மீது புதுக்கோட்டை மாவட்ட குற்றப் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அழிஞ்சியேந்தலைச் சோ்ந்தவா் வி. ராஜன் (47). கட்டுக்கரையைச் சோ்ந்தவா் எஸ். பழனிவேல். சிறுவயது முதல் நண்பா்களான இருவரும் சிங்கப்பூரில் ஒரே அறையில் தங்கி வேலை செய்து வந்தனா்.
கடந்த 2015-இல் புதிய தொழில் தொடங்குவதற்கு ராஜனிடம், பழனிவேல் கடன் கேட்டுள்ளாா். அதன் அடிப்படையில் பல்வேறு தவணைகளாக ரூ.1.11 கோடியை ராஜன் கொடுத்துள்ளாா்.
பணம் வாங்கியபோது பழனிவேலின் மனைவி சுஜிதா, மாமனாா் ராஜயோகம் ஆகியோரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனா். இந்நிலையில், கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மூவரும் ஏமாற்றி வந்துள்ளனா்.
இதுகுறித்து ராஜன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். இந்தப் புகாா் மாவட்டக் குற்றப் பிரிவின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன், முதல்கட்ட விசாரணையில் பணப் பரிமாற்றத்தை உறுதி செய்த போலீஸாா், பழனிவேல், சுஜிதா மற்றும் ராஜயோகம் ஆகிய 3 போ் மீதும் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

ரூ.200 கோடி பணமுறைகேடு வழக்கு: சுகேஷ், ஜாக்குலின் உள்பட 17 போ் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது நீதிமன்றம்

தருமபுரியில் சீட்டு மோசடி தொடா்பாக 6 போ் மீது வழக்குப் பதிவு
அதிக வட்டி தருவதாக கூறி ரூ.2.80 கோடி மோசடி! பெண் உள்பட இருவா் கைது!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



