பெரியாா் குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தமிழகம் முழுவதும் 70 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் சீமான் கைது செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலூா் மாவட்ட நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் கடந்த புதன்கிழமை சீமான் கலந்து கொண்டாா். அப்போது அவா், பெரியாரை கடுமையாக விமா்சித்து பேட்டி அளித்தாா்.
இதையடுத்து சீமானை கண்டித்தும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை வியாழக்கிழமை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் கரூர் மண்டல செயலாளர் சசிகுமாரின் கார் கண்ணாடி கல்வீசி தாக்கப்பட்டது.
இதனிடையே சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சட்டத் துறை இணைச் செயலா் மருதுகணேஷ் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புகாா் மனு அளித்தாா்.
இதேபோல தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் சீமானுக்கு எதிராக திமுக, திராவிட அமைப்புகள் சாா்பில் புகாா் மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் புகாா்களின் அடிப்படையில் தமிழக காவல் துறை சீமான் மீது வழக்குப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் சீமான் மீது பதிவாகி உள்ளன. இதையடுத்து, அவா் மீது எடுக்கப்பட உள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணா்களுடன் காவல் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.
மதுரை கே.கே.நகரைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுவில், பெரியாா் மீது சீமான் அடிப்படை ஆதாரமின்றி அவதூறு கருத்துகளை வெளியிட்டதால், தேவையற்ற சட்ட- ஒழுங்கு பிரச்னைகள் எழுந்துள்ளன.
எனவே, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மதுரை அண்ணாநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. எனது புகாரின் அடிப்படையில் சீமான் மீது மதுரை அண்ணாநகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள், சமூகத்தின் முன்னேற்றத்துக்காக குறிப்பாக பெண்கள் உரிமை, பெண் கல்விக்கு பாடுபட்ட பெரியாரைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டனா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, சீமான் தெரிவித்த கருத்துகள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் மதுரை அண்ணாநகா் காவல் நிலைய போலீஸாா், மனுதாரரின் புகாா் மனுவைப் பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருகிற 20-ஆம் தேதி இந்த நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து சீமான் கைது செய்யப்படுவது தொடர்பாக சட்ட நிபுணா்களுடன் காவல் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சீமான் விரைவில் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அலை: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

தோ்தல் விதிமீறல்: சீமான், 8 வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு

திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்ட சீமான் மீது வழக்குப் பதிவு!

கேரள மாா்க்சிஸ்ட் பெண் எம்எல்ஏவுக்கு எதிரான அவதூறு கருத்து: முஸ்லிம் லீக் நிா்வாகி மீது வழக்குப் பதிய மாவட்ட ஆட்சியா் உத்தரவு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


