
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பள்ளிக்கூடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிப் பலகையை உடைந்து விழுந்ததில் 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
தெற்கு கொல்கத்தாவில் இயங்கிவரும் பள்ளிக்கூடத்திற்கு இன்று (ஜன.13) காலை 7 மணியளவில் மாணவர்கள் வந்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பள்ளிக்கூடக் கட்டிடத்தின் 4 வது தளத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிப் பலகையின் பாகம் ஒன்று உடைந்து கீழே இருந்த மாணவர்களின் மீது விழுந்தது. இதில் 2 மாணவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கூடத்தின் தரப்பில் கூறப்பட்டதாவது, இந்த விபத்தில் காயங்கள் ஏற்பட்ட இரண்டு மாணவர்களில் ஒருவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அந்த மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது, 2 மாணவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றொரு மாணவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டுதாகவும் கூறினர்.
இதையும் படிக்க: ஜீவசமாதி அடைந்ததாகக் கூறப்படும் நபரது உடலை தோண்டியெடுக்கும் காவல் துறை!
முன்னதாக, அந்த மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் சேவைக்கூட இல்லை என குற்றம்சாட்டப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு உடல்நிலை சரியில்லாததினால்தான் அந்த சேவை தடைப்பட்டதாகவும், காயமடைந்த மாணவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டு விட்டதாகவும் பள்ளிக்கூட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த பள்ளிக்கூடத்தை நேரில் பார்வையிட்ட ராஷ்பெஹாரி சட்டமன்ற உறுப்பினர் டெபாஷிஷ் குமார் கூறியதாவது, பள்ளிக்கூடங்கள் கல்வியை செல்லிக் கொடுப்பதில் செலுத்தும் கவனத்தைப் போன்றே மாணவர்களது பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கண்ணாடிப் பலகை உடைந்து மாணவர்கள் காயமடைந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து அவர்களது தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கூட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.