மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுல் காங். கட்சியின் நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாகிச் சூட்டில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
மால்டா மாவட்டத்தின் கலியாசக் பகுதியில் இன்று (ஜன.14) காலை அம்மாநிலத்தின் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங். கட்சியின் நிர்வாகிகளான ஹசன் ஷேக், பக்குல் ஷேக் மற்றும் அவரது உதவியாளரான எசாருதீன் ஷேக் ஆகிய மூன்று பேரும் நயாபஸ்தி பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவர்கள் மூவரின் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில், ஹசன் ஷேகின் உடலில் குண்டுகள் பாய்ந்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் மற்ற இருவரும் காயமடைந்த நிலையில் மூவரும் மீட்கப்பட்டு மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஹசன் சேக் சிகிச்சைப் பலனின்றி பலியானார்.
இதையும் படிக்க: மோசமான வானிலை: ராஞ்சியில் ஏராளமான விமானங்கள் தாமதம்!
இதனைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்தில் அப்பகுதி காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்த போலீஸார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜன.2 அன்று இதே மால்டா மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியான துலால் சர்க்கார், அவரது சொந்த கட்சிக்காரர்களினாலே சுட்டுக்கொல்லப்பட்டதில் மால்டா நகர திரிணாமுல் காங். தலைவர் நரேந்திர நாத் கைது செய்யப்பட்டார்.
இதேப்போல், தற்போது கொல்லப்பட்ட ஹசன் ஷேக்கும் உள்கட்சி பூசல்களினால் கொல்லப்பட்டாரா என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த கொலை குறித்து ஆளும் கட்சியோ மற்றும் எதிர் கட்சியான பாஜகவும் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடரும் நெருக்கடி: சிலிகுரி திரிணமூல் மேயா் ராஜிநாமா; மற்றொரு மூத்த தலைவரும் விலகல்

இந்திய- இலங்கை மீனவா் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலமே சுமூகத் தீா்வு: இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவா் வலியுறுத்தல்

திரிணமூல் காங். கணக்கை முடக்க வேண்டும்! தனியார் வங்கிக்கு முன்னாள் பொருளாளர் கடிதம்!

திருட்டு கைப்பேசிகளை வங்கதேசத்துக்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு: இருவா் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


