செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஜீவசமாதி அடைந்ததாகக் கூறப்படும் நபரின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது!

கேரளத்தில் ஜீவ சமாதி அடைந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்ட விவகாரம்...

News image

கோபன் சுவாமி ஜீவசமாதி அடைந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்ட இடம்.

Updated On :16 ஜனவரி 2025, 12:12 pm IST

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஜீவசமாதி அடைந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்டவரின் உடல் காவல் துறையினரால் இன்று (ஜன.16) தோண்டியெடுக்கப்பட்டது.

நெய்யத்திங்கராப் பகுதியின் கவுவிளக்கத்தில் கோபன் சுவாமி (வயது 69) என்பவரை ஜீவசமாதி அடைந்துவிட்டதாகக் கூறி கடந்த வியாழக்கிழமை (ஜன.09) அன்று அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். மேலும், அவராகவே அன்று காலை 11 மணியளவில் அவரது சமாதி அமைந்துள்ள இடத்திற்கு நடந்து சென்று ஜீவசமாதி அடைந்துவிட்டதாகவும், அவரது உடலை பொதுமக்கள் யாரும் பார்க்கக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாகக் கருதப்பட்ட நிலையில் கோபன் சுவாமியின் உடல் தோண்டியெத்து உடற்கூராய்வு செய்ய அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, அந்த பணியை அதிகாரிகள் கடந்த ஜன.13 அன்று துவங்கியப்போது அந்நபரது குடும்பத்தினர் மற்றும் இந்து மத அமைப்புகளைச் சார்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

இதனால், அந்த இடமே பரபரப்பானதினால் கோபன் சுவாமியின் உடலை தோண்டியெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், கோபன் சுவாமியின் மரணத்திலும் அவரது இறுதி சடங்கு நடைபெற்ற முறையிலும் சந்தேகம் இருப்பதாக அவரது அக்கம்பக்கத்தினர் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அன்று முதல் அப்பகுதி முழுவதும் காவல் துறையினர் குவிக்க்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஜன.16) காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டது. அப்போது, அவரது உடல் அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும், அவரை சுற்றியிலும் விபூதி உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் வைப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், அவரது உடல் திருவனந்தப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு செய்ய கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் ஓ.வி. ஆல்பிரட் கூறியதாவது, கோபன் சுவாமியின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவரது உடல் கூராய்வு சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அந்த சோதனை முடிந்தபின்னர் மீண்டும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என அவர் கூறினார்.

முன்னதாக, அவரது உடலை தோண்டுவதற்கு தடைவிதிக்கவேண்டும் என கோபன் சுவாமியின் குடும்பத்தினர் கேரள மாநில உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர், ஆனால் மர்ம மரணங்களின் மீது அதிகாரிகள் நடவடிக்கையெடுப்பது அவர்களது அதிகார உரிமை எனக்கூறி தடைசெய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.