திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் பிப். 21-ல் திரைக்கு வருகிறது.

News image
Updated On :17 ஜனவரி 2025, 12:31 pm

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ், உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Story image

இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் வெளியிடுகிறது. ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இடம்பெற்ற ’கோல்டன் ஸ்பாரோ’, ’காதல் ஃபெயில்’, ‘ஏடி’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது

இந்த நிலையில், இப்படம் வரும் பிப். 7 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிப். 21 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பிப். 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.