நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான திரு.மாணிக்கம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்து வெளியான திரைப்படம் திரு.மாணிக்கம். இவருக்கு ஜோடியாக ‘நாடோடிகள்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யாவும் பிரதான பாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
‘சீதா ராமம்’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், திரு.மாணிக்கம் படம் ஜீ5 தமிழ் ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விமலின் வடம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஆரியின் போர்த் ஃப்ளோர்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பூக்கி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

அம்மு அபிராமியின் ஜாக்கி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


