உத்தரகண்ட் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாஷியில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு
உத்தரகண்ட் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு
Published on
Updated on
1 min read

உத்தரகண்ட்மாநிலம் உத்தரகாஷியில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ளதாவது:

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாஷி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 8.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கமானது பூமிக்கடியில் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் எந்தவொரு பாதிப்பும் இதுவரை பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com