யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நெல்லை ரயில் நிலையத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :25 ஜனவரி 2025, 3:09 am

DIN

நெல்லை ரயில் நிலையத்துக்கு மர்ம நபர்கள் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை கோபாலசமுத்திரம் பகுதியில் இருந்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து நெல்லை ரயில் நிலையத்தில் மோப்ப நாயுடன் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் இன்று(ஜன. 25) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்தும் விசாரணை தொடங்கியுள்ளது.

நேற்று தூத்துக்குடி விமான நிலையம், கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும் பின்னர் சோதனையில் அது புரளி என்பதும் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.