சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

விஜய் 69 படத்தின் பெயர் அறிவிப்பு!

எச். வினோத் இயக்கும் விஜய் 69 படத்தின் பெயர் அறிவிப்பு.

Published On :

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள விஜய் 69 படத்தின் பெயரை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.

நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை வெங்கட் கே நாரயணா தயாரிக்கிறார்.

இப்படம் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் 69-வது படத்தின் பெயர் ’ஜன நாயகன்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனநாயகன் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் என்ற அரசியல் கட்சி தொடங்கியவுடன், சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.