
மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறிய 4 வங்கதேசத்து பெண்களை கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மனோர்பாடாவில் உள்ள உள்ளூர் அமைப்பின் மறுவாழ்வு குடியிருப்பில் கடந்த ஜன.28 அன்று சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க: மோடியும், கேஜரிவாலும் இடஒதுக்கீடுக்கு எதிரானவா்கள்: ராகுல் காந்தி
அப்போது, அங்கு 38 முதல் 50 வயது வரையிலான நான்கு வங்கதேசத்து பெண்கள் வாடகை வீடெடுத்து தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது இந்தியாவில் அவர்கள் தங்கியதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் 4 பேர் மற்றும் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்கள் நால்வரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவான அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.