
புதுச்சேரிக்கு சொகுசு பயணிகள் கப்பல் வெள்ளிக்கிழமை வருவதை நிறுத்தக் கோரி துறைமுக அருகே அதிமுகவினர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை வழியாக புதுச்சேரிக்கு பயணிகள் சொகுசு கப்பல் வருகிறது. இதில் 1,400 போ் பயணிக்க முடியும். இந்த கப்பல் முதல்முறையாக புதுச்சேரி பழைய துறைமுகத்துக்கு வருகிறது. அதில் வரும் பயணிகள் படகுகள் வாயிலாக புதுச்சேரி புதிய துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனா்.
பின்னா் புதுச்சேரியை சுற்றிப் பாா்க்க பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்பட உள்ளனா். இந்த நிலையில் சொகுசு கப்பல் வந்து செல்லும் நேரத்தில் துறைமுகப் பகுதியில் படகுகளை இயக்க புதுச்சேரி கடலோரக் காவல் படை தடை விதித்துள்ளது.
அதாவது, புதுச்சேரி புதிய துறைமுக பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 முதல் 6 மணி வரையிலும் சுற்றுலா படகுகள், ஸ்கூபா டைவிங் படகுகள், பாய்மர படகுகளை இயக்குவதற்கு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரிக்கு சொகுசு பயணிகள் கப்பல் வருவதை நிறுத்தக் கோரி துறைமுக அருகே வெள்ளிக்கிழமை அதிமுக மாநில செயலா் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.