சென்னை மாதவரத்தில் கழிவு நீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலியானர்.
பெருநகர் சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3-க்கு உள்பட்ட மூலச்சத்திரம் மீனாட்சி பாரதி கூட்டுறவு நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிகளுக்காக தனியார் ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனியார் ஒப்பந்த பணியாளர் மயிலாடுதுறை மாவட்டம், கீழ் மாத்தூர் பகுதியை சேர்ந்த வினோத் ராஜ் வியாழக்கிழமை காலை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கழிவு நீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டதில், பள்ளத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒப்பந்த ஊழியர் வினோத் ராஜ் சிக்கி சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்து மாதவரம் பால்பண்ணை போலீசார்,வினோத் ராஜ் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதியோா், மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குகளைப் பெற 96 குழுக்கள் அமைப்பு
மதுரை மத்தியம்: பயனின்றிக் கிடக்கும் புதிய வணிக வளாகம்!

உலகப் புகழ்பெற்ற மகாமகம் குளத்தில் கழிவு நீர் கலப்பு: பக்தர்கள் அதிர்ச்சி!

சாலை பள்ளத்தில் லாரி சிக்கி விபத்து: குழாய் உடைந்து வீணாகிய தண்ணீா்
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை


