புதுதில்லி: பொருளாதாரத்தில் உலக அளவில் 10-ஆவது இடத்திலிருந்து 4-ஆவது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ள நிலையில், சுகாதார-தொழில்நுட்ப புரட்சியின் திருப்புமுனையாக இந்தியா உள்ளது என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
தில்லியில் மருத்துவர் நாள் மாநாட்டில் பங்கேற்று பேசிய ஜிதேந்திர சிங், பொருளாதாரத்தில் உலக அளவில் 10-ஆவது இடத்திலிருந்து 4-ஆவது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ள நிலையில், சுகாதார-தொழில்நுட்ப புரட்சியின் திருப்புமுனையாக இந்தியா உள்ளது.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலையப் பயணம், உள்நாட்டு உயிரி அறிவியல் கருவிகளை சுமந்து சென்றிருப்பதாகவும், விரைவில் ஒரு புதிய மருத்துவத் துறையான விண்வெளி மருத்துவத்திற்கு வழிவகுக்கும் ஒரு மைல்லாக இருக்கும் என்றார். மேலும், மிக விரைவில் மருத்துவக் கல்வியில் விண்வெளி மருத்துவர்கள் என்ற ஒரு பிரத்யேகப் பிரிவு உருவாகக் கூடும். இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என கூறினார்.
நாடு இரண்டு கட்ட சவாலை எதிர்கொண்டு வருகிறது. அதாவது ஆயுட்காலம் அதிகரிப்பதால் வயதான குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. நாட்டில் 70 சதவீதத்துக்கு அதிகமானோர் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றாலும், வயதான மக்களின் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வருகின்றது. 1947 இல் சராசரி ஆயுட்காலம் 50-55 வயதாக இருந்தது. இப்போது 80-ஐ நெருங்குகிறது.
நோய்த் தடுப்பு மற்றும் துல்லியமான சுகாதாரப் பராமரிப்பில் இந்தியா உலக அளவில் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. கரோனாவுக்கான உலகின் முதல் மரபணு தடுப்பூசியையும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும் ஹெச்பிவி தடுப்பூசியையும் இந்தியா தயாரித்தது. மேலும், ஹீமோபிலியாவிற்கான முதல் மரபணு சிகிச்சை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது எனவும் இதன் முடிவுகள் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ளன என்று கூறினார்.
நாட்டின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆண்டிபயாடிக் மூலக்கூறான நாஃபித்ரோமைசின் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், இது நாட்டின் மருந்து கண்டுபிடிப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்.
தனியார் துறையுடனான முதல் கட்ட ஒத்துழைப்பே இந்த வெற்றிகளுக்குக் காரணம் என்று கூறியவர், பொது மற்றும் தனியார் துறைகளின் தடையற்ற ஒருங்கிணைப்பு காரணமாக இந்த சாதனைகள் சாத்தியமானது.
கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறையினர் ஆகியோருக்கும் அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர், அறிவியல் மற்றும் மருத்துவத்தின் ஆன்மா இரண்டையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் விக்ஸித் பாரத் 2047 இன் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து "ஒருங்கிணைந்த, உள்ளடக்கிய மற்றும் எதிர்கால சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை" உருவாக்க வேண்டும் என ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்தார்.
Summary
"Very soon, we might have a dedicated stream in medical academics called Space Physicians. This is the future we must be ready for," said Dr. Jitendra Singh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகளாவிய அதிா்வுகளை வலுவாக கடந்து வந்த இந்தியா: ஜெய்சங்கா்

மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

5 ஆண்டுகளில் பொதுமக்களிடம் இருந்து 1.11 கோடி புகாா்கள் பெறப்பட்டன - மத்திய அரசு
முன்னாள் மத்திய இணையமைச்சர் பீரன் சிங் எங்டி காலமானார்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


