தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண்! முகத்தில் உருவான ஓட்டை!

அமெரிக்காவில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண்ணின் முகத்தில் ஓட்டை உருவானதைப் பற்றி...

Published On :

அமெரிக்காவில் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையான பெண்ணின் முகத்தில் ஓட்டை உருவாகி அவருக்கு தற்போது 15க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இலினொயிஸ் மாகாணத்தின் சிகாகோ நகரத்தைச் சேர்ந்த கெல்லி கோசிரா (வயது 38) என்ற பெண் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது நண்பர்களுடன் கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு அவரது நண்பர்களில் ஒருவர் வழங்கிய கோக்கைன் எனும் போதைப் பொருளை மூக்கின் வழியாக உரிந்து போதையடைந்துள்ளார்.

அன்று முதல் அவர் அந்த போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி அதற்காக சுமார் ரூ.70 லட்சம் அளவிலான பணத்தை செலவு செய்து தொடர்ந்து அவர் அந்த போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அவர் அந்த பழக்கத்திற்கு அடிமையான சில மாதங்களில் அவரது மூக்கிலிருந்து தசைகள் கிழிந்து ரத்தத்துடன் சேர்ந்து வெளியாகியுள்ளது. அந்த காயங்கள் அனைத்தும் அதுவாக குணமாகிவிடும் என அவர் நினைத்து அதனைக் கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார். ஆனால், சில நாள்களில் அவரது மூக்கு பகுதி முழுவதுமாக பாதிப்படைந்து, அங்கு ஓர் ஓட்டை உருவாகியுள்ளது.

இதைக் கண்ட அவரது குடும்பத்தினரின் தலையீட்டால், அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் போதைப் பழக்கத்தை கைவிட்டு அதிலிருந்து மீண்டுள்ளார். அதன் பின்னர் அவரது முகத்தில் விழுந்த ஓட்டையை சரிசெய்ய சுமார் 15 அறுவைச் சிகிச்சைகள் அவருக்கு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதில், அவரது நெற்றியிலிருந்து எடுக்கப்பட்ட தோலை வைத்து அவரது மூக்கை மறு வடிவமைப்பு செய்யும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

தற்போது, அவரது அறுவைச் சிகிச்சையின் காயங்கள் குணமாகி வரும் நிலையில் தனது அனுபவத்தின் வாயிலாக போதைப் பொருள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.