அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தண்ணீர் பந்தல் அமைக்க கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

கோடைகாலம் தொடங்கி இருக்கும் நிலையில் மக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில், தண்ணீர் பந்தல் அமைக்க கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

News image
முதல்வர் ஸ்டாலின்.
Updated On :5 மார்ச் 2025, 7:03 am

DIN

சென்னை: கோடைகாலம் தொடங்கி இருக்கும் நிலையில் மக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில், தண்ணீர் பந்தல் அமைக்க கட்சியினருக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

முதல்வரும், திமுக தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடைக்கால வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி, மார்ச் மாத தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் தமிழக மக்களை இந்த கோடைக் கால வெப்பத்திலிருந்து காக்கும் வகையில், திமுக சார்பில், தமிழகத்தில் உள்ள மாநகர, நகர, பகுதி, பேரூர், வட்டம் மற்றும் கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் - மக்கள் அதிகம் கூடும் இடங்களான தெருமுனைச் சந்திப்புகளிலும் - சாலை மற்றும் தெருக்கள் ஓரமாகவும், போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் யாருக்கும் எவ்வித இடையூறு இல்லாமல் “தண்ணீர் பந்தல்” அமைத்து, பொதுமக்களின் தாகம் தீர்த்திட வேண்டும்.

அவ்வாறு திமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்ற கோடை வெப்பத்தை தணிக்கும் பொருள்களை மக்களுக்கு வழங்கி, அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டும்.

மாவட்ட - மாநகர - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்ட - கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கோடை காலம் முழுவதும் இந்த தண்ணீர் பந்தல் தொடர்ந்து செயல்பட, தங்களை இந்த பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.