ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

ஜம்முவில் தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :13 மார்ச் 2025, 1:04 pm IST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பண்டிபோரா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பண்டிபோரா மாவட்டத்தின் கந்த்பால் - ஹஜின் சாலையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, தீவிரவாதிகளின் கூட்டாளிகளான 2 பேர் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி, ஒரு ஏகே-47 ரக துப்பாக்கி, 2 கையெறி வெடி குண்டுகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.