முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

ஜனநாயகன் இணையத்தில் கசிந்த விவகாரம்: மேலும் 6 பேர் கைது!

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்த வழக்கில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image

ஜனநாயகன்

Updated On :4 ஜூன் 2026, 10:01 pm IST

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்த வழக்கில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனநாயகன் படம் இணையதளத்தில் கசிந்த வழக்கில் 9 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முதல்வர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் விடுமுறையில் வெளியாகவிருந்தது. இப்படத்தில் அரசியல் ரீதியான காட்சிகள் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில் மறுதணிக்கை செய்யவேண்டி பட வெளியீடு தள்ளிப்போனது.

தணிக்கை வாரியத்தின் இழுபறி நீடித்த நிலையில் கடந்த ஏப்.3 அன்று ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது. இதுகுறித்து படத்தைத் தயாரித்த கே.வி.என். புரொடக்சன்ஸ் நிறுவனம் காவல் துறையில் புகாா் அளித்தது.

அதன்பேரில், இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் 21 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 9 பேரைக் கைது செய்தனர். இதையடுத்து இவ்வழக்கில் கைதான 9 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், இவ்வழக்கில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படக்காட்சிகளை பகிர்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் டிஜிபி பாலநாகதேவி எச்சரித்துள்ளார்.

Summary

'Jananayagan' Online Leak Scandal: 6 More Arrested!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.