எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ஆர்.ஜே. பாலாஜி சர்ச்சை! ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை?

சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்.ஜே. பாலாஜியை விமர்சித்த நிலையில் அதற்கு அறிவுரை வழங்கும் விதமாக சூர்யா பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

News image

சூர்யா / முதல்வர் விஜய்யுடன் ஆர்.ஜே. பாலாஜி

Updated On :4 ஜூன் 2026, 9:35 pm IST

சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்.ஜே. பாலாஜியை விமர்சித்த நிலையில் அதற்கு அறிவுரை வழங்கும் விதமாக சூர்யா பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, சிவதா, நட்டி நடராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி ’பேபி கண்ணன்’ என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 3 வாரங்களாக திரையரங்குளை ஆக்கிரமித்துள்ளது. கருப்பு திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

ஆர்.ஜே. பாலாஜி முதல்வர் விஜய்யை சமீபத்தில் சந்திக்கச் சென்றிருந்தார். அதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ’கருப்பு படத்தைத் தொடங்கி வைத்த மனிதருடன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது சூர்யா ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

கருப்பு படத்தின் கதையை முன்னர் கேட்ட விஜய் அரசியல் ஈடுபாடு காரணாமாக நடிக்க முடியாமல் போனதாகவும், அதற்கு பின்னே சூர்யா இதில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆர்.ஜே. பாலாஜி விஜய் நடிக்க முடியாமல் போனதால் கருப்பு படத்தில் சூர்யா நடித்ததாகக் கூறியிருப்பார்.

தொடர்ந்து, விஜய்யை முன்னிலைப்படுத்தி ஆர்.ஜே. பாலாஜி பேசியதால் சூர்யா ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து, சூர்யா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘அன்புடன் முன்னே செல்லுங்கள். பணிவாக இருங்கள். பெருந்தன்மையுடன் இருங்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.

இது ஆர்.ஜே. பாலாஜியை விமர்சிக்கும் அவரது ரசிகர்களுக்காக சூர்யா கூறியதாக சமூக வலைதள வாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சூர்யாவின் பதிவு

சூர்யாவின் பதிவு

Summary

R.J. Balaji Controversy! Surya Advises Fans?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.