தாணேவிலிருந்து கனடா வரை! ஒரு தெரு நாயின் கதை!

தாணேவிலிருந்து ஓர் தெரு நாய் கனடா நாட்டில் தத்தெடுக்கப்பட்டதைப் பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தைச் சேர்ந்த தெரு நாய் ஒன்று கனடா நாட்டில் தத்தெடுக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டைச் சேர்ந்த சலீல் நவ்காரே என்ற நபர் கடந்த 2024 டிசம்பர் மாதம் தாணேவின் வர்தக் நகர் பகுதியிலுள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு விடுமுறையில் வந்துள்ளார். அப்போது, அப்பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் ராணி எனப் பெயரிடப்பட்ட பெண் நாய் ஒன்று சுற்றித் திரிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சில நாள்கள் அந்த நாயுடன் பழகிய சலீல், ப்ளாண்ட்ஸ் அண்ட் அனிமல்ஸ் வெல்ஃபேர் சொசைட்டி எனும் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அதனை பராமரித்து வந்ததுள்ளார். பின்னர், அவர்களால் அந்த நாய் தற்காலிக தங்குமிடத்தில் சேர்க்கப்பட்டு அங்கு ராணிக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்துள்ளனர்.

இதையும் படிக்க: பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை; காவல் அதிகாரி கைது!

இந்நிலையில், ராணியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அது பயணம் செய்ய தகுதியடைந்ததினால், சலீல் செல்லப்பிராணி போக்குவரத்து நிபுணரின் உதவியை நாடினார், அவர் மூலம் அதன் இடமாற்றத்திற்குத் தேவையான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டது.

தற்போது, சலீலின் நண்பர் ஒருவர் ராணியின் விமானப் பயணச்சீட்டை பதிவு செய்துள்ளார். அதனால், கடந்த மார்ச்.20 அன்று பாரிஸ் செல்லும் விமானத்தில் தனது பயணத்தை துவங்கிய ராணி நேற்று (மார்ச் 21) கனடாவின் டொராண்டோவிலுள்ள சலீல் வீட்டை அடைந்து தனது புதிய குடும்பத்துடன் இணைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com