விசாகப்பட்டினம்: நடப்பு ஐபிஎல் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயித்த 210 ரன்கள் இலக்கைதில்லி கேபிடல்ஸ் 19.3 ஓவர்களில் எட்டி முதல் வெற்றியை ருசித்தது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் லக்னௌ அணி வீரர்கள் பவுண்டரி கோட்டுக்கு வெளியே பறக்கவிட்டனர். இதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய தில்லி அணியில் ஜேக் ஃப்ராசெர்-மெக்கர்க் 1, அபிஷேக் போரெல் ரன் ஏதும் எடுக்காமலும், சமீர் ரிஸ்வி 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, வெறும் 7 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்த தில்லி கேபிடல்ஸ் தோல்வியை தவிர்க்குமா? என்ற சந்தேகம் வலுத்தது.
எனினும், ஃபாஃப் டூ ப்ளெஸ்ஸிஸ் 29, கேப்டன் அக்சர் படேல் 22, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்கள் விளாசியபின் பெவிலியன் திரும்ப, தில்லி அணி 13 ஓவர்களுக்குள் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்களை சேர்த்து வெற்றியை நோக்கி மெல்ல நகர்ந்தது. ஆட்டமும் சூடுபிடித்தது.
நடுவரிசையில் களமிறங்கிய அஷுடோஷ் ஷர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 66 ரன்கள்(33 பந்துகளில்) திரட்ட, அவருக்கு பக்கபலமாக நின்ற விப்ராஜ் நிகாம் 15 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 39 ரன்களை விளாச ஆட்டம் தில்லி பக்கம் சாய்ந்தது.
எனினும், தில்லி அணியில் 9 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
கடைசி ஓவரில் தில்லி அணியின் வெற்றிக்கு 6 ரன்களே தேவைப்பட்ட நிலையில், கைவசம் ஒரேயொரு விக்கெட் மட்டுமே... இந்த நிலையில், பொறுப்புடன் விளையாடிய அஷுடோஷ் ஷர்மா அந்த ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட தில்லி கேபிடல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றிய இந்திய அணி!

ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா அசத்தல்; கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல் வெற்றி!

லார்ட்ஸ் டெஸ்ட்: 270 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

மீண்டும் தில்லி கேபிடல்ஸில் இணைந்த ரிஷப் பந்த்! காரணம் என்ன?
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



