அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆவுடையார் கோயிலில் புதிய தீயணப்பு நிலையம் அமைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

சாத்தியக்கூறு இருக்கும் இடங்களில் புதிய காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு நிலையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

News image
சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Updated On :26 மார்ச் 2025, 6:42 am

DIN

சென்னை: சாத்தியக்கூறு இருக்கும் இடங்களில் புதிய காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு நிலையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்தின் பேசும்போது, ஆவுடையார் கோவிலில் தீயணைப்பு மீட்புப் பணி நிலையம் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு மாவட்டங்களில் 72 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன. 23 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களும் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

ஆவுடையார் கோவிலில் தீயணைப்பு, மீட்புப் பணி நிலையம் கட்டுவதற்காக ரூ.2.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டடப் பணிகள் மே மாதம் தொடங்கும். அடுத்தாண்டு பிப்ரவரியில் திறக்கப்படும்.

மேலும், உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சாத்தியக்கூறு இருக்கும் இடங்களில் புதிய காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்கள் அமைக்கப்படும்.

காவல்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படும்போது சில அறிவிப்புகள் வரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.