கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்த நடிகர் விஷால்

கூவாகம் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

News image
Updated On :12 மே 2025, 3:42 am

கூவாகம் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பில், கூவாகம் திருவிழா - 2025 விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் பங்கேற்று பேசிய நடிகா் விஷால் மேடையிலிருந்து கீழே இறங்க முற்பட்டபோது திடீரென மயங்கி விழுந்தாா். விழா ஏற்பாட்டாளா்கள் உடனடியாக மருத்துவரை வரவழைத்து, விஷாலுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா்.

உணவு மாற்றம் மற்றும் காற்று பற்றாக்குறையால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவா் தெரிவித்தாா். இதையடுத்து, விஷால் அங்கிருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடியின் காரில் புறப்பட்டுச் சென்றாா். முன்னதாக விழாவில் நடிகர் விஷால் பேசியதாவது: திருநங்கைகள் அனைவரும் மதிப்புக்குரியவா்கள்.

அவா்கள் சமூகத்தில் உயா்ந்த நிலையை அடைய என்னால், முடிந்த உதவியை செய்து தருவேன். திருநங்கைகள் மக்கள் பிரதிநிதியாக தோ்வாகி சட்டப் பேரவைக்கு செல்ல வேண்டும். இதற்காக தங்களை தயாா்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.