

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள்(மே 16) வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி மே 16 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் பிற்பகல் 2 மணிக்கு 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.
பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரபூர்வ இணையதளங்களான https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in ஆகியவற்றில் மாணவர்கள் முடிவுகளைக் காணலாம்.
தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளும் முன்கூட்டியே கடந்த மே 8 ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் பதவியேற்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.