அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது பற்றி..
 Sevoor S Ramachandran
எடப்பாடி பழனிச்சாமியுடன் சேவூர் ராமச்சந்திரன் (கோப்புப் படம்)X | Sevoor S Ramachandran
Published on
Updated on
1 min read

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஆரணி தொகுதி எம்எல்ஏவுமான சேவூர் ராமச்சந்திரன், வருமானத்திற்கு அதிகமாக ரூ. 8 கோடி சொத்து சேர்த்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.

ஆரணியில் உள்ள அவரது வீட்டில் தொடர்ந்து 2-வது நாளாக இன்று(சனிக்கிழமை) சோதனை நடைபெற்று வருகிறது. அவரது மகன்கள் மகன்கள் விஜயகுமார், சந்தோஷ்குமார் வீடுகளிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 2016 - 2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது சேவூர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக 125% சொத்துகள் சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சேவூர் ராமச்சந்திரனின் மனைவி மணிமேகலை, மகன்கள் விஜயகுமார், சந்தோஷ் குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com