ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

பிரதமர் மோடி மே 26, 27 இல் குஜராத் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி மே 26, 27 ஆகிய தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் மோடி.

Updated On :

பிரதமர் நரேந்திர மோடி மே 26, 27 ஆகிய தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்.

மே 26, 27 ஆகிய இரண்டு நாள்கள் குஜராத்தில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, மே 26 ஆம் தேதி காலை 11.15 மணியளவில் தாஹோத் நகரில் ரயில் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். மின்சார ரயில் என்ஜின் ஒன்றையும் கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்.

பின்னர், தாஹோதில் சுமார் ரூ.24,000 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். வேராவல் - அகமதாபாத் இடையே வந்தே பாரத் விரைவு ரயிலையும், வல்சாத் - தாஹோத் நிலையங்களுக்கு இடையே விரைவு ரயிலையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். பாதை மாற்றப்பட்ட கட்டோசன்-கலோல் பிரிவையும் பிரதமர் திறந்து வைப்பதோடு, அதில் ஒரு சரக்கு ரயிலையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். பிரதமர் பொது நிகழ்ச்சியி ஒன்றில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

பிற்பகல் மாலை 4 மணியளவில் புஜ் நகருக்கு செல்லும் மோடி, அங்கு ரூ.53,400 கோடிக்கும் மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, ஒரு பொது நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுகிறார்.

மே 27 ஆம் தேதி காலை 11 மணியளவில் காந்திநகருக்குச் செல்லும் பிரதமர் மோடி, 2005 ஆம் ஆண்டு நகர்ப்புற மேம்பாட்டின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், குஜராத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மாநில தூய்மையான காற்றுத் திட்டம் ஆகியவற்றுடன் நகர்ப்புற மேம்பாட்டு ஆண்டு 2025-ஐ தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 22 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்பு வீடுகளையும் பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். பொன்விழா முதல்வர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,300 கோடி நிதியை அவர் விடுவிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.