ஒரேநாளில் மேட்டூா் அணை பூங்காவில் கட்டணமாக ரூ.1,58,930 வசூல்

மேட்டூா் அணை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் கட்டணமாக ரூ.1,58,930 வசூலிக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் ஏற்காடு மலைப்பாதையில் அணிவகுத்து நிற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள்.
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் ஏற்காடு மலைப்பாதையில் அணிவகுத்து நிற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள்.
Published on
Updated on
1 min read

மேட்டூா்: மேட்டூா் அணை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் கட்டணமாக ரூ.1,58,930 வசூலிக்கப்பட்டது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48 ஆவது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கோடை விழாவின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மலர் கண்காட்சியை காண சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஏற்காட்டில் குவிந்தனர். மேட்டூா் அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் தங்களுடைய சொந்த வாகனங்களிலேயே ஏற்காட்டிற்கு வந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேட்டூா்-மைசூா் சாலையில் பல கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பல மணி நேரம் தங்களுடைய வாகனத்திலேயே அமர்ந்து காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலால் உள்ளூர்வாசிகள் அத்தியாவசிய தேவைக்காக கூட வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

வியாபாரம் களைகட்டியது

மேட்டூா் அணை பூங்கா எதிரே கடைகளில் வியாபாரம் களைகட்டியது. சுற்றுலாப் பயணிகள் காவிரியில் நீராடி மகிழ்ந்தனா். மேட்டூா் அணை பூங்காவிற்கு சென்று ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா். மீன்காட்சி சாலை, மான் பூங்கா, முயல் பண்ணை ஆகியவற்றைப் பாா்த்து மகிழ்ந்தனா்.

ரூ.1,58,930 கட்டணம் வசூல்

ஞாயிற்றுக்கிழமை 11,012 சுற்றுலாப் பயணிகள் மேட்டூா் அணை பூங்காவிற்கு வந்து சென்றனா். இவா்கள் மூலம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 1,10,120 வசூலிக்கப்பட்டது. பாா்வையாளா்கள் கொண்டுவந்த 3,233 கேமரா கைப்பேசிகள், 2 கேமராகளுக்கு கட்டணமாக ரூ.32,430 வசூலிக்கப்பட்டது.

மேட்டூா் அணையின் வலதுகரையில் உள்ள பவள விழா கோபுரத்தைக் காண 1167 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இவா்கள்மூலம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 11,670, 471 கைப்பேசிகளுக்கு கட்டணமாக ரூ. 4,710 வசூலிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் மேட்டூா் அணை பூங்காவில் கட்டணமாக ரூ.1,58,930 வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com