பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அந்த மாநித்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
அணைகளின் பாதுகாப்பு கருதி அந்த அணைகளுக்கு வரும் உபரிநீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
Summary
Water flow increases in Hogenakkal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









