தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம்: காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில், மாநிலம் முழுவதும் உள்ள 12,480 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை(அக்.11) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில், மாநிலம் முழுவதும் உள்ள 12,480 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை(அக்.11) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தின் சிறப்பு நிகழ்வாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மாநிலம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளின் பொதுமக்களுக்குச் சிறப்புரை வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சி. தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஃபைப்ரெட் கார்ப்பரேஷன்(டான்ஃபினெட்) இணைப்பில் உள்ள 10,000 ஊராட்சிகளில் இணையத்தின் மூலம் நேரடி ஒளிபரப்பாக நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்டம் - கோவளம் ஊராட்சி, தென்காசி மாவட்டம் - முள்ளிக்குளம் ஊராட்சி. கோயமுத்தூர் மாவட்டம் - வாரப்பட்டி ஊராட்சி, விழுப்புரம் மாவட்டம் கொண்டாங்கி ஊராட்சி, மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாண்புமிகு முதலமைச்சருடன் நேரடியாக கலந்துரையாட உள்ளனர்.

கிராம சபைக் கூட்டத்தில், மக்களின் மூன்று முக்கிய அத்தியாவசிய தேவைகளைத் தேர்வு செய்து ஒப்புதல் பெறுதல், மேலும் இழிவான பொருள் தரும் சாதிப்பெயர்கள் கொண்ட குடியிருப்புகள். தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது இடங்களில் உள்ள பெயர்களை நீக்கி, புதிய பொருத்தமான பெயர்களை வழங்குதல் குறித்த தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.

அத்துடன், தாயுமானவர் திட்டம்’ கீழ் பயனாளிகளை அடையாளம் கண்டு நலிவு நிலை குறைப்புத் திட்டம் தயாரித்து ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட மொத்தம் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மேலும், கிராம சபையில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதிச் செலவினம் குறித்த விவாதம் நடைபெறும். 2024-25 ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சார்ந்த வரவு மற்றும் பணி முன்னேற்றம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம், தூய்மை பாரத் இயக்கம் திட்டத்தின் நிலை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நடவடிக்கைகள் போன்றவை பற்றியும் விவாதிக்க உள்ளது.

அதேபோல், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட 7,515 ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களின் விடியோ, ஆடியோ பதிவுகளை சபாசார் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல், பிரதம மந்திரி கிராம முன்னோடி திட்டம் கீழ் கிராம வளர்ச்சி திட்டம் தயார் செய்து அதற்கான கிராம சபையின் ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Summary

Today Tamilnadu Grama Saba meeting CM Video Conference

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com